Tuesday, November 24, 2009

முக்கி முக்கி எழுதிய முதற்பதிவு

நண்பர்களே !
வலைப்பதிவின் ஊடாக உங்களை சந்திப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.புனைபெயரோடு என் சொற்கணைகளை இணையத்தினூக அணைகடக்க வைக்க வந்திருக்கும் நான்....

சுற்றிக் கொண்டிருக்கின்ற பூமியில் இருந்துகொண்டே சுத்திக் கொண்டிருக்கும் சனத்தை
சுத்தி சுத்தி பார்த்துக்கொண்டிருக்கும் உங்களில் ஒருவன் தான்....

என் பெயரைப் பார்த்து நான் கருணையானவன் என நீங்க நினைத்தால் அது என் தப்பு அல்ல.......

என் பதிவுகளைப் பார்த்து நான் கருணையற்றவன் என நீங்க நினைத்தால் அதுவும் என் தப்பு அல்ல.......

கருவிலிருந்தே கணைகளை கேட்டு கேட்டு வளர்ந்ததால் இவன் கருணையூரான் என என நீங்க நினைத்தால் அதுவும் என் தப்பு அல்ல.......

( கரு + கணை , இங்கே கணை என்று நான் சொல்லவருவது தமிழ்ச்சொற்கணைகள் )

அப்ப யாரு ? ? ? ? ?

நண்பர்களே!
எனக்கு தமிழ் என்ற கடலுக்குள் தத்தளித்து முக்குளித்து முத்தெடுத்து மாலை தொடுக்க தெரியாது தான்.......

ஆனாலும்..... ஏதோ......

தத்தளித்து முக்குளிக்கின்ற தமிழை தத்தெடுத்து வளர்த்து அதற்கு மாலை அணிய விரும்பும் தமிழர்களில் ஒருவன் தான் நானும்......

என் கண்மணிகளே !
என் கண் மணியின் உதவியோடு பாதுகாக்கப்பட்ட விம்பங்களின் பிரதிபலிப்பைக் கொண்ட என்
கன்னி முயற்சிதான் இது...... நண்பர்களே ! நீங்க
தண்ணி ஊத்தி வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை
கண்ணி வைத்து விடாதீர்கள் இந்த கருணையூரானுக்கு..........

ஒரே தடவையில் அடுத்தடுத்து என் சொற்கணைகளை பதிவுகளாக ஏவி உங்களை
நானும் கஷ்ரப்படுத்த விரும்பவில்லை ஏதோ என்னால் முடிந்தளவு வாரம் ஓரிரு பதிவுகளோடு விரைவில் சந்திப்போம்........
என் பதிவுகளின் வகைப்படுத்தல்கள்
"மின்னாத இடிகள்"
"முகவரியிடா மடல்கள்"
"உறங்காத இரவுகளில்...."
"......................................."
"......................................."

நான் இதை ஆரம்பித்தது என் ஆசையோ இல்லை பேராசையோ எனக்கும் புரியவில்லை...
ஏதோ என் பதிவுகள் உங்கள் இதயத்தை தொட்டுச்சென்றால் நீங்களும் விட்டுச்செல்லுங்களேன் உங்கள் கருத்துக்களை..........நலம் பெற வாழ்த்துக்களோடு நன்றிகளும் கூட.......

10 comments:

Anonymous said...

உங்கள் தமிழ் கணைகள் இதயத்தை தொட்டு செல்லும் வலிமையுடையவை ...மேலும் நிறைய பதிவுகளை எழுத எனது வாழ்த்துக்கள் ...

விபு said...

//முக்கி முக்கி எழுதிய முதற்பதிவு//
அப்படி எத்தனை நாளாக எழுதினீங்க....? முக்கி
முக்கி
என்று சொன்னதால் கேட்டேன்...

//கருவிலிருந்தே கணைகளை கேட்டு கேட்டு வளர்ந்ததால் இவன் கருணையூரான்// கணைகள் தாக்காமல் இருக்கும் வரை சந்தோசம்...
/என் பெயரைப் பார்த்து நான் கருணையானவன் என நீங்க நினைத்தால் அது என் தப்பு அல்ல......
என் பதிவுகளைப் பார்த்து நான் கருணையற்றவன் என நீங்க நினைத்தால் அதுவும் என் தப்பு அல்ல....... //
இப்ப என்ன
சொல்ல வாறீங்க....? ///
கருணையானவனும் அல்ல கருணை இல்லாதவனும் அல்ல என்ன்றால், நீங்க உண்மையிலேயே யார்? மனிதன்
என்பவன் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றி இருக்கத் தானே வேணும்..

//என் கண்மணிகளே !
என் கண் மணியின் உதவியோடு பாதுகாக்கப்பட்ட விம்பங்களின் பிரதிபலிப்பைக் கொண்ட என்
கன்னி முயற்சிதான் இது...... நண்பர்களே //
நண்பர்களே சரி......... யார் அந்த கண்மணிகளே? (கண்ணில் இருப்பது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க.)
அதை விடுங்க யார் அந்த கண்மணி? (கண்மணியே காதல் என்பது கற்பனையோ? காவியமோ? கண் வரைந்த ஓவியமோ? என்று பாடாதீங்க....)

கருணையூரான் said...

விபு.... உங்கள் வருகைக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கும் நன்றிகள் .....
அது சரி , நீங்க தான் அவங்களா ??? சரி சரி புரியுது புரியுது ...இனி முன்னுக்கு இருந்த "த" ஐ போட முடியா தானே ........
அப்புறம் நாங்க முக்கினாலும் மணித்தியால கணக்கில முடிச்சிடுவமல்லோ...நாட்கள் தேவை இல்லை ....

//மனிதன்
என்பவன் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றி இருக்கத் தானே வேணும்..//இதிலிருந்தே முடிவை எடுங்களேன்....

நண்பர்கள் அனைவரும் கண்மணிகள் தான்...
ஆனால் கண்மணிகள் அனைவரும் நண்பர்கள் அல்ல.......

பால்குடி said...

அப்பாடா ஒரு மாதிரி வந்து விட்டீர்கள். இனியென்ன ஒரே மழை தான்.
நீண்ட காலமாக உங்களை எதிர்பார்த்திருந்தேன். ஆரம்பமே கலக்கல்...
வாழ்த்துக்கள். பதிவுலகத்துக்கு உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

sanjeevan said...

வந்துட்டீங்களா உங்கள் பதிவுலக பயணம் சிறப்புற வாழ்த்துக்கள்

கார்த்தி said...

வலையுலகத்தில் இன்னுமோர் புதியவர்.வாழ்த்துக்கள் வரவேற்கின்றோம் மகிழ்ச்சியுடன்..

// தத்தளித்து முக்குளிக்கின்ற தமிழை தத்தெடுத்து வளர்த்து அதற்கு மாலை அணிய விரும்பும் தமிழர்களில் ஒருவன் தான் நானும்......

பெருமையாய் இருக்கிறது. தொடர்ந்து கலக்குங்கோ!!

கருணையூரான் said...

பால் குடி , சஞ்சீவன் , கார்த்தி உங்கள் வருகைக்கும் ஆதவுக்கும் நன்றிகள்...

வடலியூரான் said...

உள்ளத்து உணர்வுகளை உலுப்பி விடப் போகும் கருணையூரானே உங்களை வாழ்த்தி வரவேற்கும் வடலியூரான்.

கருணையூரான் said...

வடலியூரான் நன்றிகள்

Anonymous said...

This Can't be a future
This is about present in jaffna

Post a Comment