Tuesday, January 19, 2010

இவைகளுக்கும் பேச தெரிந்தால் இப்படிதான் பேசுமா..........

நண்பர்களே மீண்டும் ஒரு முறை கருணையூரானின் வணக்கம் . நீங்கள் எல்லாம் நன்றாக பேசுவிங்க, நன்றாக வாதிடுவிங்க , நன்றாக சிரிப்பிங்க . ஆனால் உயிரற்ற சில பொருட்கள் மற்றும் சில உணர்சிகள் பேசினால் எப்படி இருக்கும் தெரியுமா . கீழே வாசித்து பாருங்கள் . சற்று ஆழமாக சிந்தியுங்கள்.





முதலாவதாக காதல் , காமம் இரண்டும் சந்தித்து பேசினால் எவ்வாறு இருக்கும்

காதல் :- ஏய் காமம் ! எதற்காக நான் இருக்கும் இடமெல்லாம் நீயும் வருகின்றாய். உனக்கு வெட்கம் இல்லையா ?

காமம்:- ( சற்று கோபத்துடன்) நான் இல்லாமல் நீ தனித்து வாழ முடியுமா ? நான் வந்திருக்காவிட்டால் நீ வந்திருப்பியா ? ஆனால் நீ இல்லாமலும் நான் வாழ்வேன்

காதல் :-நீயும் ஒரு கொல்லாமல் கொல்லும் சர்வாதிகாரிதான் .என் இடத்தினுள் புகுந்த நீ இப்போ " நட்பு " என்று பல இடங்களில் புகுந்து விட்டாயே

காமம்:- ( ஆணவச் சிரிப்புடன் ) நான் கத்தரிக்காயிலும் இருப்பேன் புடலங்காயிலும் இருப்பேன் நீ யார் கேட்பதற்கு ?

பின்னை பாருங்கோவன்





அடுத்ததாக நட்பு , காதல் , காமம் , கல்யாணம் , மரணம் இவைகளின் ஒரு திருவிளையாடல் எப்படி இருக்கு என்று பாருங்கள்

நட்பு ஒரு இடத்தில் நீண்ட காலமாக குடிகொண்டிருந்தது. அந்த வழியால் வந்த காதல் நட்பு இருந்த இடத்திற்கு சென்றது :-

காதல் :- நட்பே நட்பே ! சிறிது காலம் உன் வீட்டில் இருந்து விட்டு போகலாமா ?

நட்பு :- அதுக்கென்ன , அந்த மூலையில் சற்று இருந்து விட்டு செல்.

அந்த வழியால் வந்த காமம் இதனை அறிந்து நட்பின் இடத்துக்கு சென்றது

காமம் :- நட்பே நட்பே ! சற்று களைப்பாக இருக்கிறது .சற்று இருந்து விட்டு செல்லலாமா ?

நட்பு :- அதுக்கென்ன மற்ற மூலையிலே சற்று இருந்து விட்டு செல்

மீண்டும் செல்லாமல் அவ்வாறே குடிகொண்டன காதலும் காமமும் . பல காலம் சென்ற பின் கல்யாணம் அங்கு புகுந்து கேட்டது

கல்யாணம் :- நானும் இங்கு வந்து இருக்கலாமா ? அப்படி என்றால் யாரை கேட்க வேணும்

காமம் :- நான் தானே இப்படி ஒரு இடம் இருக்கு . இங்கே வந்தால் இருக்கலாம் என்று கூறினனே

காதல் :- இல்லை இல்லை என்னை தான் கேக்கணும். நான் தான் இங்கே பெரிய ஆள்

நட்பு :- ஐயோ என்ர ஐயோ என் வீட்டுக்குள் வந்தே என்னையே மறந்திட்டிங்க. எனக்கு ஒரு மூலை இடம் தாங்க நான் இருந்திட்டு போகிறேன்

இவர்களின் சத்தத்தை வீதியால் சென்றுகொண்டிருந்த மரணத்துக்கு கேட்டுவிட்டது.அங்கே வந்த மரணம்

மரணம் :- யார் எல்லாம் நீங்கள் , இவை எல்லாம் எனக்கு சொந்தமான இடங்கள் .நீங்கள் எல்லாரும் வந்தேறியகுடிகள் தான் .புறப்படுங்கள்







அடுத்ததாக கடவுளிடம் ஒரு மனிதன் பேசுகின்றான்

மனிதன் :- கடவுளே !

பூவுக்குள் தேனை வைத்தாய்
அதை தேனீக்கு சொல்லி வைத்தாய்......

கல்லுக்குள் ஈரத்தை வைத்தாய்
அதை தேரைக்கு சொல்லி வைத்தாய்......

சிற்பிக்குள் முத்தை வைத்தாய்
அதை மனிதனுக்கு சொல்லி வைத்தாய்......

என்னுள் என்ன வைத்தாய்
அதை யாருக்கும் சொல்லி வைக்கும் அளவுக்கு......

கடவுள் :- ( சிரித்தவாறே ) தேனீயோ தேரையோ எல்லாம் தேடல் மூலம் தான் கண்டுபிடித்தன .நீயும் உன்னுள் இருப்பதை முதலில் தேடு வாழ்வில் வெற்றி பெறுவாய்

மனிதன் :- தேடல் மூலம் நூற்றெட்டு கடவுளை கண்டுபிடித்து இவ்வாறு கேட்டு அலுத்துவிட்டேன் . இன்னும் தேடல் தான் என் வாழ்க்கை என்றால் இன்றிலிருந்து மரணத்தையே தேடுகின்றேன்

கடவுள் :- ( நக்கல் சிரிப்புடன் ) மரணத்தை நீ தேட தேவை இல்லை அது தானாக தேடி வரும் .





அடுத்ததாக நிலாவும் மனிதனும் பேசுகின்றார்கள்


மனிதன் :- நிலாவே ! இவ்வளவு அழகாக இருக்கின்ற நீ எதற்காக அழுக்கு நிறைந்த பூமியை காதலித்து சுற்றிக்கொண்டிருக்கின்றாய்

நிலா :- இல்லை இல்லை நீ இங்கே வந்து பார் எவ்வளவு அழகாக இருக்கிறதே பூமி அதுதான் சுற்றிக்கொண்டிருக்கிறேன்

மனிதன்:- ஓகோ அப்படியா ! வேண்டாம் நான் அங்கு வந்தால் உன் மீது நான் கொண்ட காதலும் வெறுப்படையலாம் . நானும் இங்கிருந்தே உன்னை காதலிக்கின்றேன்

Monday, January 11, 2010

தேர்தல் தினத்தில் அரசியல்வாதிகளின் வீட்டில் காலைப்பொழுது.....(சிறு கற்பனை)

வணக்கம் நண்பர்களே !

நேரம் இல்லாமையால் சிறிது காலம் பதிவு போட முடியவில்லை. இந்த பதிவும் திடீரென எழுதப்பட்ட ஒன்றுதான்.ஏதும் தவறு இருந்தால் மன்னித்து அதை சுட்டிக்காட்டவும்.

நண்பர்களே !
தெரியும் தானே உங்களுக்கு தேர்தல் ஒன்று வருதாம் எண்டு. நல்லது. அரசியல் எனக்கு அவளவு தெரியாது . எல்லாரும் ஏதோ அரசியல் என்று பதிவு போட்டு முழங்கி தள்ளுறாங்க. நானும் ஏதோ என்னால முடிஞ்சளவு வித்தியாசமா ஒன்றை தருவம் என்று முயற்சித்தேன்.




தேர்தல் அன்று எல்லா அரசியல்வாதிகளும் வாக்குபோட தானே வேணும் . எல்லாரும் முதல் நாளே தங்களுடைய வீட்டுக்கு போயிடுவாங்க தானே. ஒவ்வொரு அரசியல் வாதிகளின் வீட்டிலும் காலை வேளை எவ்வாறு இருக்கும் . என்ன என்ன பேசுவாங்க.என்ன என்ன நடக்கும் என்பதை என்னுடைய ஒரு கற்பனையில் தந்துள்ளேன். கூடாமல் அல்லது பிழையா இருந்தா திட்டுவீங்களா. இல்லைதானே.யாரையும் நக்கல் அடிப்பதற்காக இது எழுதப்படவில்லை. ஒவ்வொருவரின் மீது உள்ள அன்பின் மிகுதியினால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்த போது உதித்தது தான் இவை.

மதிப்புக்குரிய மகிந்த ராஜபக்ஷ வீட்டில் :-

அவர் நித்திரையில் இருந்து 4.30 மணியளவில் எழும்புகின்றார். அரைக்காற்சட்டையை இழுத்து விட்ட பின் கால் கையை நீட்டி முறுக்கெடுத்த படியே அறையை விட்டு வெளியே வரும் போது மனுசிக்காரி முழுகி முடிஞ்சு கூந்தல் ஈரத்தை உலர்த்திக் கொண்டிருந்தா.....

ம :- அம்மே கால் கை எல்லாம் வலிக்குது . இரவு தூக்கமும் சரியா வரல்ல

சி :- உங்களுக்கு நான் சொன்னான் தானே கதைக்கும் போது சும்மா சும்மா கையை மேலயும் கீழேயும் ஆட்டாதிங்க எண்டு

ம:- சும்மா போங்க ...அப்படி என்ன எனக்கு வயசு போட்டுதா ஆடாமல் அசையாமல் இருக்க

சி:- இஞ்சா உங்களுக்கு SMS வந்து இருக்கு சீனா வில இருந்து யாரோ Wish பண்ணி அனுப்பி இருக்காங்க

ம:- சரி பிறகு பாப்பம்...நல்ல நேரம் 8:09:59:29 தானே . நேரம் ஆகுது எங்கை எண்ட சிவத்த துண்டு தோய்ச்சு போட்டனீங்களே

சி:- கொடியில போட்டனான் வாறன் எடுத்துக்கொண்டு.......
கொடியை நோக்கி செல்லும் போது 2 நாய்க்குட்டிகள் துண்டை இழுத்து விளையாடுவதை
அவதானிக்கின்றா

சி:- அடீக் ஓடுக் ஓடு ... இவளவு பேர் சுத்தி நிண்டும் இந்த நாய்க்குட்டி உள்ளை வந்திட்டுதே ....ஓடுங்க உங்களுக்கு அவரட்ட சொல்லி ஒரு முடிவு எடுக்கிறேன்




மதிப்புக்குரிய சரத் வீட்டில் :-

5 மணிக்கு அவரின் கைத்தொலைபேசி அலாம் அடிக்கின்றது மனைவி உடனே எழுந்து விட அவர் இன்னும் எழும்புவதாக தெரியவில்லை

மனைவி :- நேரம் ஆச்சு ..இண்டைக்கெல்லோ தேர்தல் ..நீங்கள் கேக்கிறீங்க அதையும் மறந்திடிங்களா

அவர்:- அட ஆமா என்ன ..ஐயோ நல்ல கனவு ஒண்டு குழப்பிடிங்க நீங்க...அப்படியே நான் ஒரு பெரிய கதிரை ல காலுக்கு மேல கால் போட்டு கொண்டு இருக்கிறன்...அந்த கதிரை சட்டத்தில யாரோ 2 பேர் இருந்து காதைப் பிடிச்சு ஏதோ பேசுற மாதிரி

மனைவி :-நீங்க இப்ப 2 ,3 நாளா கனவில என்ன கதைச்ச எண்டு எனக்கு தானே தெரியும். எழும்பி வெளிக்கிடுங்கோ

அவர்:- இஞ்சா ரணிலுக்கு போன் பண்ணி எனக்கு நல்ல நேரம் என்ன எண்டு கேளுங்க

மனைவி :- இஞ்சாருங்க உங்களுக்கு வெளிநாட்டில இருந்து வாழ்த்தி கனக்க SMS வந்து இருக்கு

அவர் :- எல்லாம் அழிச்சிட்டு வெளிக்கிடு பன்சலக்கும் போகணும்



மதிப்புக்குரிய இரா, சம்மந்தன் வீட்டில் :-

6 மணி இருக்கும் அப்பதான் அவர் எழும்பி வேட்டியை உதறிக் கட்டிக்கொண்டு வருகின்றார். மனைவியைக் கண்டவுடன்

அவர் :- இரவு முழுக்க நித்திரை இல்லை.உடம்பு முந்தின மாதிரி இல்லை ..இயலாது தான் எண்டாலும் எங்கட தமிழ் சனத்துக்கு ஏதாவது செய்திட்டு தான் ஓய்வு பெறணும்.அது இருக்கட்டும் உந்த பஞ்சாங்கத்தை எடுத்திட்டு வா சுப நேரம் என்ன எண்டு பாப்பம்

மனைவி :- ம் ..இந்தாங்க ....இஞ்சா ஆருக்கு போட போறிங்க நீங்க

அவர்:- அட உனக்கு சொல்ல மறந்திட்டனே ...அதாவது வந்து இப்ப... எங்களுக்கு வந்து...

மனைவி:- போதும் போதும் போயிட்டு வந்து சொல்லுங்க



மதிப்புக்குரிய சிவாஜிலிங்கம் வீட்டில் :-

எந்தவித பயமும் பதற்றமும் இல்லாமல் எழுந்து நெட்டி முறித்த படியே

அவர்:- அப்பாடா இந்த கடல் காத்து நல்ல நித்திரை வருது..பேசாமல் ஒண்டும் போடாமல் படுத்திடலாம் போல இருக்கு ....பிள்ளை உந்த Radio ஐ போடு என்ர ராசிக்கு என்ன பலன் எண்டு பாரு பிள்ளை.....மற்ற பக்கத்து வீட்டு பொடிச்சிமாருக்கு வடிவா சொன்னனியா என்ர சின்னம் என்ன எண்டு

அவ்வாறே வெளிக்கிட்டு வாக்களிக்க செல்லும் போது எங்கோ இருந்து ஒரு பல்லி சொல்கிறது.அதைக்கேட்ட அவர்
பல்லி சனியன் உனக்கு சொல்ல வேறை நேரம் இல்லையா ...கொஞ்ச நேரம் இருந்திட்டு போவம் ..பிள்ளை உந்த பஞ்சாங்கத்தை எடு......



மதிப்புக்குரிய ரணில் வீட்டில் :-

அவரும் வேளைக்கு எழும்பி குளிச்சு வெளிக்கிட்டு தயாராக இருக்கின்றார்.
அதுக்கு பிறகு தான் மனைவி எழுந்து வருகின்றார்

மனைவி :- என்னப்பா நீங்கள் எதுக்கு வேளைக்கு எழும்பி இருக்கிறிங்க

அவர் :- உனக்கென்ன தெரியும் எனக்கு உள்ள சோலி எனக்கு தானே தெரியும்
.
மனைவி :- அதுக்கு என்ன யோசிக்கிறிங்க

அவர்:- ஒவ்வொரு இடத்திலும் போய் என்ன என்ன சொன்ன எண்டு யோசிக்கிறன்

மனைவி :- ஆறுதலா யோசிட்டு வாங்க போவம்



கௌரவ அமைச்சர் டக்லஸ் தேவானந்தா வீட்டில் இருப்பார் எண்டு நான் நம்பவில்லை



நன்றி நண்பர்களே.....மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம் .அந்த பெண்ணின் நாட்குறிப்பேடு விரைவில் வரும். என் பதிவை வாசித்ததுக்கு நன்றிகள்.