Saturday, February 6, 2010

அழகு எது ?...அழகு எது ?... அழகு எது ?...

நண்பர்களே இந்த பதிவிலே " அழகு எது ? " என்ற தலைப்பில் கவிதை போல ஏதோ ஒன்று எழுதியுள்ளேன் . ஏதும் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். இது வைரமுத்துவின் " மகிழ்ச்சி " என்ற கவிதையின் சாயலை ஒத்தது. அதைக்கேட்டு எங்கள் சமூகத்தோடு சம்மந்தப்படுத்தி எழுதியுள்ளேன் . படித்துப் பாருங்கள்



தமிழ்ப்பதிவருக்கு அழகு எது ?

தினமும் பதிவு எழுதிப்போட்டு வாசிகர்களிற்கு திணிப்பது.....

இல்லை

தன்னைப் பற்றி தானே புகழ்ந்து பதிவு எழுதுவது.....

இல்லை

நாறிப்போன சினிமாவையும் மலிந்து கிடக்கும் விளையாட்டையும் மட்டும் தூக்கிப் பிடிப்பது.....

இல்லவே இல்லை

தமிழ்ப்பதிவருக்கு அழகு தாய் மொழி தமிழில் தப்பின்றி பதிவு எழுதுதல்.....




காதலனுக்கு அழகு எது ?

காதலி தங்கமாக பாதுகாத்து வளர்த்த அங்கங்களை வர்ணித்து புகழ்தல்.....

இல்லை

காதலியின் உடல் வெப்பநிலையை அடிக்கடி பரிசோதித்து மருந்து கொடுத்தல்.....

இல்லை

காதலியை மடியில் படுத்தி பேன் இருக்கும் இடத்தில் சொறிந்து விடுதல்.....

இல்லவே இல்லை

காதலனுக்கு அழகு காதலன் என்ற நிலையில் மட்டும் இருந்து காதலை பேணுதல்.....




இந்து சமயத்தவனுக்கு அழகு எது ?

நெற்றியில் பட்டை அணிந்து கோவிலை முப்பது தரம் சுற்றுதல்.....

இல்லை

நூற்றெட்டு கோவில் சென்று அர்ச்சனை செய்தல்....

இல்லை

கடவுள் படத்தை வீடு எங்கும் மாட்டி வைத்தல்....

இல்லவே இல்லை

இந்து சமயத்தவனுக்கு அழகு தான் எப்பவும் இந்து சமயத்தவன் என்பதை மறவாது இருத்தல்.....




தமிழ் வானொலிக்கு அழகு எது ?

நேயர்களிற்கு பரிசுகளை அள்ளி வழங்குதல்.....

இல்லை

இருக்கின்ற மூன்றுக்குள் போட்டியிட்டு முன்னுக்கு வருதல்.....

இல்லை

நேயர்களின் சுக நலங்களை திருப்ப திருப்ப விசாரித்தல்.....

இல்லவே இல்லை

தமிழ் வானொலிக்கு அழகு பழமை வாய்ந்த தமிழ் மொழியை கொல்லாமல் இருத்தல்.....




பெண்ணுக்கு அழகு எது ?

அங்கமெல்லாம் தங்க நகைகளை தொங்க விடுவது .....

இல்லை

அங்க அசைவுகளை பகிரங்கப்படுத்தும் ஆடை அணிவது.....

இல்லை

படித்து பட்டம் பெற்று பணம் சம்பாதிப்பது....

இல்லவே இல்லை

பெண்ணுக்கு அழகு அடங்க வேண்டிய இடத்தில் அடங்கி அடக்க வேண்டிய இடத்தில் அடக்கி வாழ்வது....




வாசித்ததுக்கு நன்றிகள் . மீண்டும் வருக.

6 comments:

கவி said...

"படித்து பட்டம் பெற்று பணம் சம்பாதிப்பது....

இல்லவே இல்லை"
என்ன சொல்லுறிங்கள், பெண் என்பவள் பட்டம் படிக்க தேவை இல்லை என்கீறிர்களா????

"தமிழ் வானொலிக்கு அழகு பழமை வாய்ந்த தமிழ் மொழியை கொல்லாமல் இருத்தல்....."
உண்மை..பல தமிழ் வானொலிகள் உணர வேண்டிய ஒன்று ...

காதலனுக்கு அழகு காதலன் என்ற நிலையில் மட்டும் இருந்து காதலை பேணுதல்.....
புரியுது புரியுது ...

"தமிழ்ப்பதிவருக்கு அழகு தாய் மொழி தமிழில் தப்பின்றி பதிவு எழுதுதல்....."

உங்களை போலவா???(ஏனெனில் உங்கள் பதிவுகள் எல்லாமே வித்தியாசமா இருக்கிறதாக பேசுறாங்க)

வித்தியாசமான ஒரு பதிவுதான் இதுவும்
..அருமை ...

வடலியூரான் said...

நீங்களும் சின்னதொரு வைரமுத்துவாக முயற்சி பண்ணியிருக்கிறீர்கள்.நன்றி நல்ல கற்பனை.அது ஏன் உங்களுக்கு இந்து சமயதவன் மீதும் தமிழ் வானொலி மீதும் அவ்வளவு கோபம்

கருணையூரான் said...

///என்ன சொல்லுறிங்கள், பெண் என்பவள் பட்டம் படிக்க தேவை இல்லை என்கீறிர்களா????///அது அழகு இல்லை என்று மட்டும் சொல்கிறேன்

நன்றிகள் கவி

கருணையூரான் said...

வடலியூரான் நன்றிகள்

///அது ஏன் உங்களுக்கு இந்து சமயதவன் மீதும் தமிழ் வானொலி மீதும் அவ்வளவு கோபம்///
கோபம் என்று இல்லை ஏதோ ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடு

Tharshy said...

உணர்ச்சிமிக்க கவிதை......வாழ்த்துக்கள்...

கருணையூரான் said...

கொற்றவை உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்

Post a Comment