நண்பர்களே மீண்டும் ஒரு முறை கருணையூரானின் வணக்கம் . தேர்தல் காலம் என்பதால் வீட்டுக்கு சென்றதால் பதிவு போட முடியவில்லை. இந்த பதிவிலே இந்த காதல் என்ற சாமன் இருக்குதானே அதை எப்படி எல்லாம் விபரிக்கலாம் அது வந்தால் என்ன என்ன நடக்கும் என்று என் மனதில் உதித்ததை உங்களுடன் பகிருகின்றேன்.பதிவு ஒன்று போட வேண்டும் என்று அவசரமாக உடனே எழுதி போட்டது. படித்து பாருங்கள்.
காதல் (ஒரு சொல்லில்) :-
உணர்ச்சி
காதல் (இரண்டு சொற்களில்) :-
காமத்திற்கான நுழைவாயில்
காதல் (மூன்று சொற்களில்) :-
இரண்டு இதயங்களும் கலக்கும்
காதல் (நான்கு சொற்களில்) :-
கவர்ச்சிக்கு அடுத்து காமத்துக்கு முன்
காதல் (ஐந்து சொற்களில்) :-
சொல்லாமல் வருவது ஆனால் கொல்லாமல் போகாதது
காதல் (ஆறு சொற்களில்) :-
ஊடுருவும் போது இனிப்பு ஊடுருவிய பின் உறைப்பு
காதல் (ஏழு சொற்களில்) :-
கடவுளால் உயிரினத்துக்காக படைக்கப்பட்டது இன்று மனிதனின் சிறைக்குள் சிக்கித்தவிக்கிறது
காதல் (எட்டு சொற்களில்) :-
அழகைக் கூட்டும் பொழுதைக் கழிக்கும் ஓமோன்சுரப்புக்களை பெருக்கும் உறவுகளை பிரிக்கும்
காதல் (ஒன்பது சொற்களில்) :-
உருவமற்ற பேய் இது பிடித்து விட்டால் இரவு பகல் தெரியாமல் அலையும்
காதல் (பத்து சொற்களில்) :-
மின்னல் போல் இடைக்கிடையே தோன்றி மறைய காமம் மட்டும் இடியாக சிறிது நீடிக்கும்
காதல் (பதினொரு சொற்களில்):-
சாதி மதம் குலம் அறியாது நுழைந்து நன்றாக வளரும் போகும்போது அதில் ஒன்றை தூக்கிப்பிடிக்கும்
காதல் (பன்னிரண்டு சொற்களில்):-
உதட்டின் ஈரலிப்பை கூட்டும்
கைகளின் வலிமையை அதிகரிக்கும்
நெஞ்சை நிமித்தி காட்டும்
கண்கள் செய்வதறியாது துடிக்கும்
நண்பர்களே என்னுடைய பதிவை வாசித்ததுக்கு நன்றிகள் . மீண்டும் இன்னொரு வித்தியாசமான பதிவோடு சந்திப்போம்.
Thursday, February 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
vithiyaasamaana sinthanaikal!!!! good!!!
//காதல் (ஐந்து சொற்களில்) :-
சொல்லாமல் வருவது ஆனால் கொல்லாமல் போகாதது//
என்ன அனுபவமா?
//காதல் (ஏழு சொற்களில்) :-
கடவுளால் உயிரினத்துக்காக படைக்கப்பட்டது இன்று மனிதனின் சிறைக்குள் சிக்கித்தவிக்கிறது//
பிடித்தது
//காதல் (ஒன்பது சொற்களில்) :-
உருவமற்ற பேய் இது பிடித்து விட்டால் இரவு பகல் தெரியாமல் அலையும்//
சிரிப்பு தான் வருகிறது
என்ன அன்ன இப்படி எல்லாம் எழுதிறீங்க....? இப்படி வித்தியாசமாக என்று சொல்ல வந்தான்
"காமத்திற்கான நுழைவாயில்"
முற்று முழுதான உண்மை !!
"ஊடுருவும் போது இனிப்பு ஊடுருவிய பின் உறைப்பு"
உண்மையாவா ??
"சாதி மதம் குலம் அறியாது நுழைந்து நன்றாக வளரும் போகும்போது அதில் ஒன்றை தூக்கிப்பிடிக்கும்"
புரியவில்லை ....நீங்கள் என்ன சொல்லவாறீங்கள் இங்க ?
உங்கள் பதிவை பார்க்கும் போது நீங்கள் காதலித்து கஷ்டபட்டு உங்கள் அனுபவத்தை எழுதுவது போல இருக்கே !!!அப்பிடியா??
இருந்தாலும் அருமையான ஒரு காதல் பதிவு !!<3!!
பொறுக்கி + சுயம்பு ///vithiyaasamaana sinthanaika///நன்றிகள்
சிந்து
அனுபவம் தான் நண்பர்களின்....
///என்ன அன்ன இப்படி எல்லாம் எழுதிறீங்க....? இப்படி வித்தியாசமாக என்று சொல்ல வந்தான்///
வித்தியாசமா மாறிவிட்டேன் அதனால் வித்தியாசமா எழுதுகின்றேன்
நன்றிகள்
கவி நன்றிகள்...
///"ஊடுருவும் போது இனிப்பு ஊடுருவிய பின் உறைப்பு"
உண்மையாவா ??/// எண்டு பேசுறாங்க ஊரில
///"சாதி மதம் குலம் அறியாது நுழைந்து நன்றாக வளரும் போகும்போது அதில் ஒன்றை தூக்கிப்பிடிக்கும்"
புரியவில்லை ....நீங்கள் என்ன சொல்லவாறீங்கள் இங்க ?////இப்ப விளங்கா இன்னும் வயசு வரணும்
///உங்கள் பதிவை பார்க்கும் போது நீங்கள் காதலித்து கஷ்டபட்டு உங்கள் அனுபவத்தை எழுதுவது போல இருக்கே !!!அப்பிடியா?? ////காதலை பார்த்து கஸ்ரப்பட்டவன்
கருணையூரான் உங்கள் ஒவ்வொரு பதிவும் முந்தைய பதிவிலிருந்து, சக பதிவர்களின் பதிவுகளிலிருந்து வேறுபடுகின்றதே எப்படி உங்களால் மட்டும் முடிகிறது?.நன்றி.காதலைப் பற்றி வெவ்வேறு அளவுகளில் (சொற்களில்)சொல்லியுள்ளீர்கள்.வெவேறு தேவைகளுக்குப் பிரயோசனப் படும்(sms, facebook status)
வடலியூரான் நன்றிகள்..ஏதோ நம்மால முடிஞ்சளவு
உருவமற்ற பேய் இது பிடித்து விட்டால் இரவு பகல் தெரியாமல் அலையும்
:)))
Post a Comment