Wednesday, February 10, 2010

அரசியல் வாதிகளின் காதலர்தின செய்தி ( கற்பனை )

நண்பர்களே மீண்டும் ஒரு வித்தியாசமான பதிவோடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.காதலர் தின சிறப்பு பதிவாக என்ன போடலாம் என்று யோசித்த போது உதித்த என் கற்பனைதான் இது. காதலர் தினத்தில் எங்கள் அரசியல்வாதிகள் சிலர் காதலர் தினத்தை பற்றி உரையாற்றினால் அல்லது வாழ்த்துச்செய்தி அனுப்பினால் அது எவ்வாறு இருக்கும் என்பதை சுருக்கமாக தந்துள்ளேன் . அரசியல் காரணங்களிற்காக எழுதவில்லை . படித்துப் பாருங்கள் . தப்பிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.





மதிப்புக்குரிய சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ்வின் காதலர் தின வாழ்த்துச்செய்தி


கணவன் மனைவி ஆகப்போகும் நாட்டின் செல்வங்களே ! ( என்ன ! ஆகப் போகுமா ? ) வருங்கால நாட்டைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறைக் காதலர்களே ! அனைவருக்கும் சாந்தி சமாதானம் நிறைந்த சுபீட்சமான நாளாக இந்த காதலர் தினம் அமைய வாழ்த்துக்கள். ( வழமையான விசயம்)

முப்பது வருட தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு இன்று முதல் காதலர்தினம். ( ஆமால்லே ) அனைத்து காதலர்களும் இன்று பயம் , பதற்றம் இன்றி காதலர் தினத்தை கொண்டாடலாம். எங்கும் சுதந்திரமாக சுற்றி திரியலாம். காலி முகத்திடலுக்கு போகலாம் . கடற்கரைகுப் போகலாம் .படம் பார்க்க போகலாம் . பூங்காக்கு போகலாம். இன்று நீங்கள் சுதந்திர பறவைகள். குதூகலாமாக கொண்டாடலாம். ( இவ்வளவு காலமும் எதுவும் செய்யலயோ )


இந்த நாட்டிலே சாதி மத பேதம் எதுவும் இல்லை .இருப்பது இரு சாதிகள் மட்டும் தான் ஒன்று காதலை நேசிக்கும் சாதி மற்றது காதலை வெறுக்கும் சாதி. ( உண்மைதான் ) எது எவ்வாறு இருந்தாலும் நான் சொல்வதை செய்பவன் செய்வதை சொல்பவன். அந்த வகையில் பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து துடைத்தெறிந்தது போல் இந்த நாட்டிலுள்ள கள்ளக் காதலையும் விரட்டி தாய்த் திருநாட்டை பாதுகாப்பேன். (இதற்காக தனி காவல்த்துறை குழுவை நியமித்தால் நல்லது)


காதலர்களின் எதிர்கால நலன் கருதி ரஷ்யாவின் நிதி உதவியோடு பல வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம் . முதற்கட்டமாக தங்காலை கடற்கரையில் பெரிய காதலர் களியாட்ட விடுதி ஒன்றை நிறுவவுள்ளோம். அடுத்த காதலர் தினத்தில் திறப்பு விழாவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன் ( உங்க காதலியும் வருவாவோ.. சீ.. மனைவி) . அது மட்டுமல்ல அனைத்து பேரூந்துகளிலும் பின்வரிசை ஆசனங்களை காதலர்களிற்காக ஒதுக்குவது தொடர்பாகவும் ( இப்படியே போனால் ஒதுக்கப்படாத ஆசனமே இருக்காது போல ) திரையரங்குகளில் காதலர் கூண்டுகளை அதிகரிப்பது தொடர்பாகவும் ( இது தேவை இல்லை வெளிச்சத்தை எல்லாத்தையும் நிறுத்த சொல்லுங்க ) பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. விரைவில் அவை நடைமுறைக்கு வரும். அத்துடன் அடுத்த பொதுத்தேர்தலின் பின் புதிதாக காதல் அபிவிருத்தி அமைச்சை உருவாக்கி அதற்காக அமைச்சர்களையும் நியமிக்கவுள்ளேன் . ( அப்ப இன்னும் அமைச்சர்களின் எண்ணிகை கூட போகுது போல ) காதலர்களிற்கு நல்ல எதிர்காலம் உண்டாகுக . நன்றிகள் .






கௌரவ அமைச்சர் முரளிதரனின் காதலர் தின வாழ்த்துச்செய்தி


காதலர்தின நன்நாளிலே உங்களிற்கு வாழ்த்துச் செய்தி தெரிவிப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன் .இன்று எங்கள் நாட்டை எடுத்துக் கொண்டால் அனைத்து காதலர்களும் எவ்வளவு சுதந்திரமாக காதலை கொண்டாடிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் அதற்கு காரணம் எங்கள் மதிப்புக்குரிய சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் தான்.எதிர்க்கட்சிகளோடு இருந்து நாம் எங்களின் காதலர்களையும் அவர்களின் காதலையும் வளர்க்க முடியாது. ஆளும் கட்சியோடு இணைந்து செயற்பட்டால் தான் எங்கள் காதலர்களையும் முன்னேற்றமடைய செய்யலாம்.இன்று மேல் தென் மாகாண காதலர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் பல சுக போகங்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். எங்கள் காதலர்களும் அனுபவிக்கவேண்டும்.( என்னத்தை சொல்ல வாறிங்க ) அதற்காக எங்கள் சனாதிபதியோடு இணைந்து கிழக்கின் உதயத்தின் கீழ் கிழக்கின் கடற்கரைகளில் மரங்கள் வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.(நல்ல அடுக்கடுக்கா நடுங்க என்ன ) விரைவில் இது நடைமுறைப்படுத்தபடும்.


அன்று நான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருக்கும் போது பிரபாகரனுக்கு தெளிவாக கூறியிருந்தேன் போராடுவதன் மூலம் எம் காதலர்களோ காதலோ வளராது என்று.( ஓகோ! இதுவும் ஒரு காரணமா ) இன்று அனைத்து காதலர்களும் அதனை உணர்ந்து இருக்கின்றார்கள். அனைத்து காதல்களும் வளர வாழ்த்துக்க .







மதிப்புக்குரிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் காதலர்தின வாழ்த்துச்செய்தி


அனைத்து காதலர்களிற்கும் எனது வாழ்த்துக்கள்.இன்று சமாதானமாகவும் சுதந்திரமாகவும் காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றீர்கள். அன்று குச்சு ஒழுங்கைகளில் காதலை கொண்டாடிய எம் காதலர்கள் இன்று தலைநகரில் கொண்டாடும் அளவுக்கு நிலைமையை கொண்டு வந்தது எங்கள் சனாதிபதி தான்.( எங்கட யாழ் காதலர்கள் தானே ? எப்படி கண்டுபிடிச்சிட்டனே ) இன்று தலைநகரில் வெள்ளவத்தை கடற்கரை பற்றைகளிற்கு சென்று பாருங்கள் , சினிமா திரையரங்குகளில் நுழைந்து பாருங்கள் , பெரிய விடுதிகளிற்கு சென்று பாருங்கள் , வெள்ளவத்தை இணைய கூண்டுகளுக்குள் சென்று பாருங்கள் எங்கள் காதலர்கள் எவ்வளவு உல்லாசமாக மெய்மறந்து கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள் என்று ( ஓகோ அது எங்கட காதலர்களா பார்க்க தெரியவே இல்லையே ) , அந்த வகையில் எங்கள் சனாதிபதிக்கு நன்றி கூற கடமைப் பட்டுள்ளோம்

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடக்கின் கடற்கரையோர முட்கள் , குச்சொழுங்கை முட்கள் என்பவற்றை அழிக்க திட்டமிட்டுள்ளதோடு யாழ் பல்கலைக்கழகதிற்கு அருகில் காதலர்களிற்காக தனியான இடம் ஒன்றையும் ஒதுக்க திட்டமிட்டுள்ளதோடு அனைத்து காதலர்களிற்கும் பாலியல் கருத்தரங்குகளை நடத்தி( இன்று தேவையான ஒன்று தான்) பங்கு பற்றும் காதலர்களிற்கு ஒரு டசின் ------- களையும் ( இந்த சொல் தணிக்கைக் குழுவினால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது ) வழங்க திட்டமிட்டுளோம்.இதனால் வருங்காலத்தில் எம் காதலர்களும் பயமின்றி காதலை வளர்க்க வழிவகுக்கும்.நன்றிகள்








கௌரவ நாடளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தனின் காதலர் தின செய்தி


காதலர்தின நன்நாளில் எங்களுடைய காதலர்களைப் பாருங்கள் . எத்தனை காதலர்கள் இன்று பிரிக்கப் பட்டிருக்கின்றார்கள் . எத்தனையோ காதலர்கள் இன்று சந்திக்க வழியின்றி முகாம்களில் தொடர்பின்றி வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் .( முகாமில் இப்படியும் ஒரு பிரச்சினை இருக்கா ? எப்படிதான் கண்டு பிடிக்கிறாங்களோ !) அது மட்டுமா இன்று வடக்கில் காதல் பரிசுப் பொதிகளிற்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. காதலர்கள் பெரும் விலை கொடுத்து அவற்றை வாங்க வேண்டியுள்ளது எம் காதலர்களின் இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் நல்ல தீர்வொன்றை முன் வைக்க வேண்டும். இது தொடர்பாக நான் இந்தியா சென்று கலந்துரையாடினேன். அவர்கள் அது தொடர்பாக அரசாங்கதிற்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதி மொழி அளித்தார்கள். அத்துடன் தமிழ்நாட்டு அரசு தொப்புள்கொடி காதலர்களிற்காக நல்ல இன ரோஜா பூக்களை அனுப்ப முன்வந்துள்ளனர்.தற்போது வீடு வீடாக சென்று சேகரித்து வருகின்றனர் .விரைவில் அது வந்து சேரும்.அனைத்து காதலர்களிற்கும் நல்ல எதிர்காலம் உண்டாகட்டும்.




நண்பர்களே என் வலைப்பூவுக்கு வருகை தந்து பொறுமையாக வாசித்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் தந்தமைக்கு நன்றிகள் .வேறை ஒரு வித்தியாசமான பதிவோடு சந்திப்போம் . அனைவருக்கும் முற்கூட்டிய காதலர்தின வாழ்த்துக்கள்.

14 comments:

கன்கொன் || Kangon said...

கலக்கல்....

கலக்கி எடுத்துவிட்டீர்கள்... :)

Anonymous said...

நல்ல நகைச்சுவை! வாழ்த்துக்கள்! புல்லட் இப்போது வர வர சீரியஸ் பதிவராகி வருவதால் நீங்கள் விரைவில் அந்த இடத்தை அடைந்து விட வாழ்த்துக்கள்!

புல்லட்டிற்குப் போட்டி வந்தாச்சு!!!!

lishan said...

மிகவும் வித்தியாசமா இருக்குதப்பா.. ரொம்ப நன்றி............இவை உண்மையான அரசியல் சாயம் கலந்த வாழ்த்துக்கள் .

Anonymous said...

சூப்பர் அப்பு... தங்கள் முயற்சி தொடர நல்வாழ்த்துகள்.....
கலக்குங்கள்......

Anonymous said...

வித்தியாசமான ஒரு கற்பனை தான் ..
நல்லாக இருக்கு..அசத்திட்டிங்க ...

உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் ...

கருணையூரான் said...

கன்கொன் || Kangon , lishan , மற்றும் பெயரில்லாமல் வந்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள்

கருணையூரான் said...

/// புல்லட் இப்போது வர வர சீரியஸ் பதிவராகி வருவதால் நீங்கள் விரைவில் அந்த இடத்தை அடைந்து விட வாழ்த்துக்கள்!

புல்லட்டிற்குப் போட்டி வந்தாச்சு!!!! ///
அவருக்கு போட்டியாக வர முடியுமா ...அவர் ஒரு மூத்த நகைச்சுவை பதிவர் ...அவர் நகைச்சுவை குறும் திரைப்படங்கள் பலவற்றை இயக்கி இருக்கின்றார்...அவரின் இடம் தனி இடம்

நந்தரூபன் said...

கலக்குறின்ங்க போங்க...................

வாழ்த்துக்கள்

வடலியூரான் said...

கலக்குறீங்க போங்க..எப்பிடித்தான் உங்களால மட்டும் இப்பிடியெல்லாம் முடியுதோ

அண்ணாமலையான் said...

சும்மா பின்னி எடுத்துட்டீங்க.. வாழ்த்துக்கள்....

கருணையூரான் said...

நந்தரூபன் நன்றிகள் .... சத்தியாமாக நான் கலக்கவில்லை காதலர்தினத்தையும் காதலர்களை பற்றியும் தான் எழுதினேன்

கருணையூரான் said...

வடலியூரான் , அண்ணாமலையான் நன்றிகள் .....

கார்த்தி said...

Anna Superb!!! Keep it up!!
// அனைத்து காதலர்களும் இன்று பயம் , பதற்றம் இன்றி காதலர் தினத்தை கொண்டாடலாம். எங்கும் சுதந்திரமாக சுற்றி திரியலாம். காலி முகத்திடலுக்கு போகலாம் . கடற்கரைகுப் போகலாம் .படம் பார்க்க போகலாம் . பூங்காக்கு போகலாம்

இவ்வளவும்தானா???? அதுக்கும்(------) போகலாம். இதுக்கும் (---------) போகலாம்.

கருணையூரான் said...

கார்த்தி நன்றிகள் ....ம் ...அதுக்கும் போகலாம் ...அதுக்கையும் போகலாம் ...இதுக்கும் போகலாம் ...இதுக்கையும் போகலாம்

Post a Comment