( ஐப்பசி 2007 - வைகாசி 2009) போட்ட என் உள்ளத்து உணர்வுகள் சிலவற்றை இந்த பதிவினூடாக தருகின்றேன். உங்கள் பொன்னான நேரத்தை என் இந்த சிறிய பதிவிலே செலவிட்டமைக்கு ஆரம்பத்திலே நன்றியை சொல்லிவிடுறேன். நன்றி சொல்லிடானே என்று மூடாமல் கீழ இழுங்கோ.....
இவை அக்காலத்திற்கு ஏற்றவாறு எழுதப்பட்டது . இக்காலத்தோடு ஒப்பிட்டு பாக்காதீங்க.தப்பாக இருந்தால் மன்னித்துவிடுங்க் பதிவுலகத்தில் தவழ்ந்துகொண்டிருக்கும் இக் கருணைக் குழந்தையை.......
1)
உன் கோலங்கள் மாறினாலும் கொள்கைகள் மாறினாலும் காலன் வரும் வரை காலம் உன்னை காப்பாற்றும்........
வாயால் மட்டும் வெட்டி விளாசும் ஒரு நண்பனுக்காக எழுதப்பட்டது
2)
நான் ஒரு கோழை உன் வாய் முன்னாடி........
ஆனால்
உன்னைப்போல் கோழை இல்லை நாய் முன்னாடி.........
நான் வீரன் என் தாய் முன்னாடி .........
ஆனால்
உன்னைப்போல் வீரன் இல்லை பொய் முன்னாடி .........
3)
கருணையும் நிதியும் இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் இன்று புரிந்துகொண்டேன் உன்னிடம் இருப்பது கருணையல்ல நிதி மட்டுமே என்று.......(புரியுது தானே யாருக்கு எண்டு)
4)
ஏய் ! 2008 போறியா நீ ? உனக்கென்று தந்தனுப்ப எனக்கென்று எதுவுமில்லை...
உன் தங்கை 2009 இடம் கொடுத்துவிடுகிறேன் எனக்கு விடிவு கிடைத்தால்.......
5)
+ , * எதுவும் இன்றி - இடமேயின்றி வாடும் உறவுகளை / துடிக்காதே ........
(விளங்காட்டி வெக்கப்படாம கேளுங்கோ)
இது "என்னுடைய சந்தேகம்" என்ற தலைப்பில் எழுதப்பட்டது
6)
பேய் கூட இப்போ அதிகமாக அலைகின்றது
அரைகுறையாக செல்லும் ஆத்மாக்களாலோ.............
நாய் கூட இப்போ நன்றியற்றதாக மாறுகின்றது
மனிதனோடு சேர்ந்து வாழ்வதனாலோ................
காய் கூட இப்போ வெம்பி விழுகின்றது
அதுவும் தன் இனப்பெருக்கத்தை வெறுப்பனாலோ..............
பாய் (தாயின்) கூட இப்போ அதிகமாக ஈரமாகிறது
பசியால் அழும் குழந்தையின் கண்ணீராலோ..............
தாய் கூட இப்போ தாலாட்ட மறக்கிறாள்
வடக்கில் வானிலிருந்து மழையாகப் பொழிவதனாலோ........
வாய் கூட இப்போ மூட மறுக்கின்றது
உயிர் எப்போதும் தன்னூடக போகலாம் என்று நினைக்கின்றதோ.......
பொய் கூட இப்போ உண்மையை சுடுகின்றது
இங்கே பொய் தான் வெல்லும் என்று அதற்கும் தெரிந்துவிட்டதோ..............
சேய் கூட இப்போ பால் குடிக்க மறுக்கின்றது
இரத்தவாடை பாலில் இருந்து வருகின்றது என நினைக்கின்றதோ......
நோய் கூட இப்போ அதிகமாக வருகின்றது
அதற்கும் இங்கே மருந்து இல்லை என்று தெரிந்து விட்டதோ.....
இது "எப்போது" என்ற தலைப்பில் எழுதப்பட்டது
7)
பச்சோந்தி தமிழன் இருக்கும் போது. . .
பசுமை வருவது எப்போது?
பொறாமைத்தமிழன் இருக்கும் போது. . .
பொற்காலம் வருவது எப்போது?
சுயநலம் பிடித்த தமிழன் இருக்கும் போது. . .
சுதந்திரம் வருவது எப்போது?
தமிழையே அழிக்கும் தமிழன் இருக்கும் போது. . .
தமிழர்க்கு தனிநாடு வருவது எப்போது?
பிரதேசவாதம் பேசும் தமிழன் இருக்கும் போது. . .
பிரிவு இல்லாமல் வாழ்வது எப்போது?
மனச்சாட்சி இல்லாத தமிழன் இருக்கும் போது. . .
மனம் திறந்து பேசுவது எப்போது?
எப்போது எப்போது என கேட்க வேண்டி இருக்கு. . .
எவனோ ஒருவன் அப்போது விட்ட தவறினால். . . .
இவை என் வாழ்க்கையை பிரதிபலிப்பவை ஆனால் எவ்வளவு தூரம் உண்மை என்று கேக்காதீங்க என்ன ...
8)
கடவுளே ! விதியை எழுதும்போது கிறுக்கிய அதை வெல்ல மதியை வைக்கும்போது சறுக்கிய நீயும் என் வாழ்க்கையில் ஒரு பொறுக்கிதான்......
இது "என்னைப்பற்றி" என்ற தலைப்பில் எழுதப்பட்டது
9)
பிறக்கும் போதே சாவின் விளிம்பு வரை சென்றவன் நான்.....
அதனாலோ ?....சாவை கண்டு பயப்படாதவனும் நான்.
கடவுள் எனக்கு தந்தது போதும் என நினைப்பவன் நான்...
அதனாலோ ?... கடவுளிடம் அதிகம் செல்லாதவன் நான்.
அனைவருக்கும் மனச்சாட்சி இருக்கு என நடப்பவன் நான்....
ஆனால் !...அனைவரிடமும் மனச்சாட்சி இருக்கு என நிருபிக்காதவனும் நான்.
தமிழை மிக மிக விரும்புபவன் நான்...
ஆனால் !...தமிழரை மிகவும் வெறுப்பவன் நான்.
என் குல தொழிலை வெறுத்தவன் நான்...
ஆனாலும்... என்னால் முடிந்தவரை என் குலத்தை பின்பற்றுபவன் நான்.
அமைதியனா வாழ்க்கையை விரும்புபவன் நான்...
அதனாலோ ?...அதிகம் அலட்டிக்கொள்ளாதவன் நான்..
நான் நான் என்று அதிகமாக பாவித்துவிட்டேனோ நான்....
...எனக்கும் நான் என்ற ஆணவம் இருப்பதனால் போல ?
மீண்டும் ஒரு பதிவு போட்டு உங்களுக்கு தொல்லை கொடுப்பேன். நன்றிகள்
அதுவும் தன் இனப்பெருக்கத்தை வெறுப்பனாலோ..............
பாய் (தாயின்) கூட இப்போ அதிகமாக ஈரமாகிறது
பசியால் அழும் குழந்தையின் கண்ணீராலோ..............
தாய் கூட இப்போ தாலாட்ட மறக்கிறாள்
வடக்கில் வானிலிருந்து மழையாகப் பொழிவதனாலோ........
வாய் கூட இப்போ மூட மறுக்கின்றது
உயிர் எப்போதும் தன்னூடக போகலாம் என்று நினைக்கின்றதோ.......
பொய் கூட இப்போ உண்மையை சுடுகின்றது
இங்கே பொய் தான் வெல்லும் என்று அதற்கும் தெரிந்துவிட்டதோ...........
சேய் கூட இப்போ பால் குடிக்க மறுக்கின்றது
இரத்தவாடை பாலில் இருந்து வருகின்றது என நினைக்கின்றதோ......
நோய் கூட இப்போ அதிகமாக வருகின்றது
அதற்கும் இங்கே மருந்து இல்லை என்று தெரிந்து விட்டதோ.....
இது "எப்போது" என்ற தலைப்பில் எழுதப்பட்டது
7)
பச்சோந்தி தமிழன் இருக்கும் போது. . .
பசுமை வருவது எப்போது?
பொறாமைத்தமிழன் இருக்கும் போது. . .
பொற்காலம் வருவது எப்போது?
சுயநலம் பிடித்த தமிழன் இருக்கும் போது. . .
சுதந்திரம் வருவது எப்போது?
தமிழையே அழிக்கும் தமிழன் இருக்கும் போது. . .
தமிழர்க்கு தனிநாடு வருவது எப்போது?
பிரதேசவாதம் பேசும் தமிழன் இருக்கும் போது. . .
பிரிவு இல்லாமல் வாழ்வது எப்போது?
மனச்சாட்சி இல்லாத தமிழன் இருக்கும் போது. . .
மனம் திறந்து பேசுவது எப்போது?
எப்போது எப்போது என கேட்க வேண்டி இருக்கு. . .
எவனோ ஒருவன் அப்போது விட்ட தவறினால். . . .
இவை என் வாழ்க்கையை பிரதிபலிப்பவை ஆனால் எவ்வளவு தூரம் உண்மை என்று கேக்காதீங்க என்ன ...
8)
கடவுளே ! விதியை எழுதும்போது கிறுக்கிய அதை வெல்ல மதியை வைக்கும்போது சறுக்கிய நீயும் என் வாழ்க்கையில் ஒரு பொறுக்கிதான்......
இது "என்னைப்பற்றி" என்ற தலைப்பில் எழுதப்பட்டது
9)
பிறக்கும் போதே சாவின் விளிம்பு வரை சென்றவன் நான்.....
அதனாலோ ?....சாவை கண்டு பயப்படாதவனும் நான்.
கடவுள் எனக்கு தந்தது போதும் என நினைப்பவன் நான்...
அதனாலோ ?... கடவுளிடம் அதிகம் செல்லாதவன் நான்.
அனைவருக்கும் மனச்சாட்சி இருக்கு என நடப்பவன் நான்....
ஆனால் !...அனைவரிடமும் மனச்சாட்சி இருக்கு என நிருபிக்காதவனும் நான்.
தமிழை மிக மிக விரும்புபவன் நான்...
ஆனால் !...தமிழரை மிகவும் வெறுப்பவன் நான்.
என் குல தொழிலை வெறுத்தவன் நான்...
ஆனாலும்... என்னால் முடிந்தவரை என் குலத்தை பின்பற்றுபவன் நான்.
அமைதியனா வாழ்க்கையை விரும்புபவன் நான்...
அதனாலோ ?...அதிகம் அலட்டிக்கொள்ளாதவன் நான்..
நான் நான் என்று அதிகமாக பாவித்துவிட்டேனோ நான்....
...எனக்கும் நான் என்ற ஆணவம் இருப்பதனால் போல ?
மீண்டும் ஒரு பதிவு போட்டு உங்களுக்கு தொல்லை கொடுப்பேன். நன்றிகள்
17 comments:
அருமையான கவிதைகள்...
உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது...
என்னுடைய தெரிவு இரண்டாவதும், ஆறாவதும்....
வாழ்த்துக்கள்...
Facebook உங்களுக்கு பல உதவி பண்ணி இருக்கு என்கிறீங்கள் அப்போ ( உங்கள் கருத்துகளை தெரிவிக்க தான் )
தமிழை மிக மிக விரும்புபவன் நான்...
தெரியுது ! தெரியுது!! ( உங்க எல்லா பதிவுகளையும் பார்க்கும் போது )
"தமிழரை மிகவும் வெறுப்பவன் நான்"
ஆஹா ஆஹா ..
அழகான கவிதை வரிகள் ... சூப்பர்...
கடவுளே ! விதியை எழுதும்போது கிறுக்கிய அதை வெல்ல மதியை வைக்கும்போது சறுக்கிய நீயும் என் வாழ்க்கையில் ஒரு பொறுக்கிதான்......
அழகான வரிகள்
கருணையூரான் உங்கள் கவித்துவமான வரிகளால் ஒருகாலம் வதனநூலையே கலக்கியிருந்தீர்கள்.மீண்டும் அந்த அழகிய வரிகளை தந்தமைக்கு நன்றிகள்.எனக்கு உங்கள் எல்லாவரிகளும் பிடித்திருந்தாலும் தமிழனைப் பற்றியும் உங்களைப் பற்றியும் கருணை நிதி பற்றிய வரிகளும் அதிகம் பிடித்திருக்கின்றன.
கன்கொன் || Kangon ...உங்களுக்கு எனது நன்றிகள் என் உணர்ச்சிகளை புரிந்துகொண்டமைக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கும்.....
கொற்றவை நன்றிகள்
வடலியூரான் அப்படியா .. சரி சரி கருத்துக்களிற்கு நன்றிகள்
ரசிக்கத்தக்க வரிகள் கருணையூரான்.....
காசினி அக்கா.... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
இன்றுதான் உங்கள் தளத்துக்கு வந்தேன் பழைய பதிவுகளையும் வாசித்தேன் நன்றாக இருக்கிறது
நன்றிகள் A.சிவசங்கர்
// + , * எதுவும் இன்றி - இடமேயின்றி வாடும் உறவுகளை / துடிக்காதே ........
அந்தக்காலத்தில் நான் பார்த்து கலங்கிய வரிகள்.
நீங்கள் அந்தக்காலத்தில் போட்ட ஸ்டேடஸ்களை வைத்துக்கொண்டே எழுதிவிடலாம் பல பதிவுகளை!
நன்றிகள் கார்த்தி ....ம் உண்மைதான்
கருத்துக்கள் நிறைந்த வரிகள். கருணையூரான் இப்போது நீங்கள் ஏன் இப்படியான வசனங்களை மூஞ்சிப் புத்தகத்தில் போடுவதில்லை...? நிறையவே எதிர்பார்க்கிறோம்...
ஏய் ! 2008 போறியா நீ ? உனக்கென்று தந்தனுப்ப எனக்கென்று எதுவுமில்லை...
உன் தங்கை 2009 இடம் கொடுத்துவிடுகிறேன் எனக்கு விடிவு கிடைத்தால்........//
எனக்குப் பிடித்தது இந்தச் சிலேடைச் சிணுங்கல் தான்.
இவ்வளவு நாளும் இப்பிடி ஒரு பதிவுத் தளம் இருக்கிறது என்பதை அறியாமல் இருந்து விட்டேன்.
இன்று தான் வந்தேன். நன்றாக உள்ளது தங்களது தனித்துவமான இருவரிக் கவிகள்.
பால்குடி நன்றிகள் ..மிக விரைவில் மீண்டும் என் வ்லைப்பூவில் இப்படியான விசயத்தை எதிர்பாருங்கள்
கமல் உங்கள் வருகைக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்கும் நன்றிகள் ...உங்கள் வலைப்பூவையும் இன்றுதான் அறிந்தேன் . நானும் இனி உங்களோடு இணைந்திருப்பேன்
Post a Comment